النتائج 1 إلى 1 من 1

الموضوع: சோழிய வெள்ளாளர்

சோழிய வெள்ளாளர் சோழிய வெள்ளாளர் / சோழிய வெளாளர் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் தமிழ்நாடு, மொழி(கள்) தமிழ் சமயங்கள் இந்து சோழியன் அல்லது சோழியர் என்று அழைக்கப்படும் சோழிய வெள்ளாளர் இனமானது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகங்களுள் தொன்மை

  1. #1

    افتراضي சோழிய வெள்ளாளர்

    சோழிய வெள்ளாளர்

    சோழிய வெள்ளாளர் / சோழிய வெளாளர் சோழிய வெள்ளாளர் Ki.aa.pe.viswanatham குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் தமிழ்நாடு, மொழி(கள்) தமிழ் சமயங்கள் இந்து
    சோழியன் அல்லது சோழியர் என்று அழைக்கப்படும் சோழிய வெள்ளாளர் இனமானது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகங்களுள் தொன்மை வாய்ந்தது வெள்ளாளர் (பிள்ளைமார்) சமூகத்தில் ஒரு பெரும் பிரிவாகும். சோழிய வெள்ளாளர், சோழிய வேளாளர், சோழ நாட்டு வெள்ளாளர், வெற்றிலைக்காரர், கொடிக்கால்காரர் மற்றும் கீரைக்காரர் என்று அழைக்கப்படுகின்றனர்.[1]
    பொருளடக்கம்

    [மறை]

    • 1தோற்றம்
    • 2புலம்பெயர்வு
    • 3குலப்பட்டம்
    • 4சோழிய வெள்ளாளர் இல்லத்துப் பிள்ளைமார்
    • 5குலதெய்வ வழிபாடு
    • 6சோழிய வெள்ளாளர் சங்கம்
    • 7முக்கிய சோழிய வெள்ளாளர்
    • 8தொடர்புடைய இணைப்புகள்
    • 9குறிப்புகளும் மேற்கோள்களும்


    தோற்றம்[தொகு]

    சோழிய வெள்ளாளர் எனும் பிரிவானது வெள்ளாளர் (பிள்ளைமார்) சமூகத்தின் கீழ் வரும் சாதியாகும். இவர்கள் பொதுவாக சோழ நாட்டின் உழுகுடிகளாக இருந்துள்ளார்கள். [2]. சோழிய வெள்ளாளருள் கருப்புடையான், மருதூருடையான் போன்ற 64 கோத்திரங்கள் இருப்பதாக சோழ மண்டல சதகம் சொல்கின்றது.
    புலம்பெயர்வு[தொகு]

    தொடக்க காலத்தில் சோழிய வெள்ளாளர்கள் தமிழ்நாட்டின் கிழக்கு மாவட்டங்களில் இருந்தார்கள்.[3] தற்பொழுது அவர்கள் தமிழ்நாடு கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ளார்கள். அவர்கள் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியிலோ திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் இருந்து தமிழ்நாடு மற்ற பகுதிகளில் குடிபெயர்ந்தனர்.
    குலப்பட்டம்[தொகு]

    'பிள்ளை' என்ற குலப்பட்டத்தினை தங்கள் பெயர்களுக்கு பின்னால் போட்டுக் கொள்ளும் வழக்கம் உள்ளவர்கள்.
    சோழிய வெள்ளாளர் இல்லத்துப் பிள்ளைமார்[தொகு]

    சோழிய வேளாளர்கள் இல்லத்துப் பிள்ளைமார்களுடன் தொடர்புடையவர்கள் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. ஏனெனில் இல்லத்துப் பிள்ளைமார் சாதியினர் அக்காள் மகளைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கமில்லாதவர்கள். ஆனால் சோழிய வேளாளர் சாதியினர் அக்காள் மகளைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கமுடையவர்கள். ஒரு வேளை, சோழிய வேளாளர் சாதியினர் இல்லத்துப் பிள்ளைமார் சாதியினராக இருந்து அக்காள் மகளை திருமணம் செய்து கொள்ளும் வழக்கத்திற்கு மாறிக் கொண்ட ஒரு குழுவினராக இருக்கலாம் என்கிற கருத்தும் நிலவுகிறது. இல்லத்துப் பிள்ளைமார் நாடார் சமூகத்தினரோடு தொடர்புடையவர் ஆவார்கள்.
    குலதெய்வ வழிபாடு[தொகு]

    சோழிய சமூகத்தை சார்ந்தவர்கள் குலதெய்வ வழிபாட்டு முறையை இன்னும் கொண்டிருக்கின்றார்கள். திருச்சிக்கு அருகே முக்கொம்புமேலணை என்னுமிடத்தில் உள்ள அருள்மிகு பாப்பாத்திஅம்மன், கொல்லிமலை மாசி பெரியசாமி, அன்னகாமாட்சி, நன்னிலம் தாலுகா, கொல்லுமாங்குடி அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் போன்ற தெய்வங்களை வழிபடுகின்றார்கள். துரையூர் வட்டத்தில் இருக்கும் வைரசெட்டி பாளையத்தில் பெரியசாமிக்கென பெரும்கோவில் கட்டி குடிபாட்டு தெய்வமாக வணங்கி வருகிறார்கள். சிலர் கீழ் வரும் தெய்வங்களையும் குலதெய்வமாக வழிபடுகிறார்கள். ஹரிஹர புத்திரர் (சாஸ்தா), புஞ்சை சங்கேந்தி, லால்குடி,ஒமாந்தூர் ஸ்ரீ மூங்கில் அமர்ந்தவள் ஈஸ்வரி (சப்த கன்னிமார்கள் ) திங்களூர், திருவையாறு வட்டம் தஞ்சாவூர் காமாட்சி அம்மன், திருங்க காலனி, ஈரோடு,நீலியாயி செல்லி அம்மன், திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன், ஒமாந்தூர் பகுதியில் இவர்கள் உருவம் அற்ற ஒளி உருவமான காமாட்சி அம்மன் பெரியண்ண சாமி சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பெரியாச்சி என்கிற பெரியாண்டவர் நாமக்கல் மாவட்டம் கல்கட்டாணுர் கோதண்டபெருமாள் வீரபத்திரர் மதுரைவீரணையும் வழிபட்டு வருகின்றனர்.[சான்று தேவை] திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள வீரப்பூர் என்ற ஊரில் அமைந்துள்ள பெரியக்காண்டி அம்மன், மகாமுனி, பொன்னர், சங்கரையும் வழிபட்டு வருகின்றனர்.
    சோழிய வெள்ளாளர் சங்கம்[தொகு]

    சோழிய வெள்ளாளர் சங்கம் முதன்முதலில் திருச்சி டவுன் வெள்ளாளர் பரஸ்பர பரோபகார சங்கம் என்ற பெயரில் 1943 ம் ஆண்டில் நகர சங்கமாக துவக்கப்பட்டு 1944 ம் ஆண்டில் சங்கங்களின் பதிவாளரிடம் பதிவு செய்ய பட்டது.பதிவு எண் ச .2 / 44 ஆகும்.[சான்று தேவை]
    இந்த சமுதாயத்தை 1974 ம் ஆண்டில் கலைஞர்
    கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்த போது மறைந்த முன்னாள் தமிழக அமைச்சர் பெருமக்களாகிய பனைமரத்துப் பட்டி திரு . க.ராஜாராம் , கணியூர் திரு ,கே,ஏ. மதியழகன்,திரு ப.வு.சண்முகம், சிங்கம் புணரி திரு மாதவன் , சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.கிருஷ்ண மூர்த்தி , தி.மு.க.வின் சொத்து பாதுகாப்பு உறுப்பினரும் திருச்சியின் நகராட்சி தலைவராக தமிழகத்திலேயே மிக அதிக வாக்குகள் வாங்கி வென்றவருமான மறைந்த திரு.மா.பால கிருஷ்ணன் பிள்ளை( இவர் நமது முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு.பரணி குமார் அவர்களின் தந்தை ) போன்றவர்களின் மிகுந்த ஒத்துழைப்புடன் திரு ஏற்காடு சட்ட மன்ற உறுப்பினராக இருந்த திரு ஜெகன்னாதப்பிள்ளை அவர்கள் பிற்படுத்த பட்ட ( பி.சி ) சமுதாயம் என்று அரசால் அறிவிக்க செய்து அரசாணை வெளியிட்டார்கள்.
    அந்த நேரம் திருச்சி மாவட்டத்தின் செயலாலராக திரு .கோவிந்தம் பிள்ளை அவர்கள் இருந்தார்கள்.
    திரு தி.பொ.மாணிக்க வாசகம் பிள்ளை என்பவர் தலைவர் ஆக இருந்தார்.( இவர் நமது முசிறி திரு விட்டல் பிள்ளை அவர்களின் சகோதரியின் கணவர் ஆவார்.)
    திரு கோவிந்தம் பிள்ளை அவர்களின் காலத்தில் தான் சோழிய வெள்ளாளர் சங்கம் மிகுந்த எழுச்சி அடைந்தது.
    மண்டல் கமிசனின் தலைவாரக இருந்த மண்டல் என்கிற ஐ .ஏ.எஸ்.அதிகாரி இந்தியாவிலுள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் பட்டியல் தயாரிக்க திருமதி இந்திரா காந்தி அவர்களால் நியமிக்க பட்டார் .
    ஒவ்வொரு மாவட்டங்களாக அவர் வந்த போது .சேலம் முதல் . ஈரோடு வழியாக , கரூர், நாமக்கல், திருச்சி,பெரம்பலூர், தஞ்சாவூர் , திண்டுக்கல், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை , நாகப்பட்டினம் , புதுவை -காரைக்கால் வரை யிலுள்ள சுமார் 46 சட்ட மன்ற தொகுதிகளில் வசிக்கும் மக்களை ஒருங்கிணைத்து மிகவும் பிற்படுத்த பட்டவர் கள் என்ற பட்டியலில் சேர்க்க மிகுந்த முயற்சி எடுத்தார்.
    முசிறி அருகே உள்ள சிட்டிலரை கிராமத்தில் உள்ள நமது சங்கத்தின் ஐ.டீ.ஐ இடம் 27 ஏக்கர் நிலம் திரு கோவிந்தம் பிள்ளை அவர்களால் நமது கிளை சங்கங்களின் நன்கொடையால் வாங்கப்பட்டது.
    அந்த முயற்சி தொடர்ந்து வந்து கொண்டிருந்த போது 1986 ம் ஆண்டு தற்போது தலைவர் ஆக இருக்கும்திரு டாக்டர்.ஜெயபால் அவர்கள் பதவிக்கு வந்தார்.
    அன்றைக்கு செயலாளர் ஆக முன்னால் சட்ட மன்ற உறுப்பினர் திரு .வி.கிருஷ்ண மூர்த்தி அவர்கள் செயலாளர் ஆக தேர்ந்து எடுக்கபட்டார் .
    அப்போது திரு கேசவ ராஜ் அவர்களை செயலாளர் ஆகிட திரு ஜெயா பால் அவர்கள் கேட்டுகொண்டதால் சங்க வளர்ச்சியை கருத்தில் கொண்டு திரு வி.கிருஷன மூர்த்தி அவர்கள் தனது செயலாளர் பதவியை விட்டு கொடுத்தார்...டாக்டர் ஜெயபால் அவர்களின் இளைய சகோதரரும் டாக்டருமான .திரு கனகராஜ் அவர்கள் சங்கத்தின் உறுப்பினர் மட்டுமே....தற்போது வரை .எந்த பொறுப்பிலும் இல்லை . டாக்டர் வி. ஜெயபால் அவர்கள் தொடங்கினார். இப்போது கேசவராஜ், கனகராஜ் ஆகியோரும் நிர்வாகிகளாக உள்ளனர்.[4]
    முக்கிய சோழிய வெள்ளாளர்[தொகு]


    • கி.ஆ.பெ.விஸ்வநாதம் பிள்ளை - மருத்துவர், தமிழ்ப்பற்றாளர்
    • A.பெருமாள் பிள்ளை,இந்திய தேசிய காங்கிரஸ்,ஓமலூர்,சேலம்,தமிழ்நாடு
    • முத்துஇருளப்ப பிள்ளை - விஜயரகுநாத முத்து ராமலிங்க சேதுபதி அமைச்சர்
    • மாவீரர் சி.செண்பகராமன் பிள்ளை - இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போராளி் ஆவார்
    • மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை - செந்தமிழ்க் களஞ்சியம் "இலக்கணத் தாத்தா" வித்துவான்
    • சொ.மறைமலை அடிகள் புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர்
    • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிள்ளை - மக்கள் கவி
    • சிவசங்கர நாராயண பிள்ளை (எஸ்.எஸ்.பிள்ளை) - கணித மேதை
    • ப.ஜீவானந்தம் - பொதுவுடமைத் தலைவர் 1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்
    • நவநீதம் பிள்ளை - பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஐநா மனித உரிமைகள் ஆணையாளர்
    • எல்.டி.சுவாமிகண்ணு பிள்ளை - இந்திய வானியலாளர், தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் சபாநாயகர்
    • கத்தியின்றி ரத்தம் இன்றி யுத்தம் ஒன்று வருகுது என்ற புகழ் பெற்ற பாடலை இயற்றிய .நாமக்கல் .கவிஞர் .வே. ராமலிங்கம் பிள்ளை
    • டாக்டர் வி.ஜெயபால் - மருத்துவர் தமிழ்நாட்டு வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர்
    • திரு.கேப்டன் ஜெகதீசன் அவர்கள் சோழிய வெள்ளாளர் சங்கத்தில் எப்போதும் எந்த பொறுப்பிலும் இருந்ததில்லை.அவர் அனைத்து வெள்ளாளர் கூட்டமைப்பின் செயலாளர் ஆவார்கள்.
    • கனகராஜ் சிதம்பரம் பிள்ளை - உலக புகழ் மிக்க விருநதோம்பல் நிபுணர்
    • திருவாரூர் மைதின் கோவிந்தராஜ் - தமிழ்நாட்டு வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் செயலாளர்
    • மகுடஞ்சாவடி tvr.கருணாகரன் - சேலம் மாவட்ட வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்பாளர்
    • T.கலியமூர்த்தி பிள்ளை - திருவாரூர்
    • முனைவர். ம. எழில் பரமகுரு (அரசியல் பிரமுகர், கல்வியாளர்)

    தொடர்புடைய இணைப்புகள்[தொகு]


    • வெள்ளாளர்
    • பிள்ளைமார்



    சோழிய வெள்ளாளர்

    التعديل الأخير تم بواسطة د ايمن زغروت ; 07-09-2017 الساعة 10:08 AM

معلومات الموضوع

الأعضاء الذين يشاهدون هذا الموضوع

الذين يشاهدون الموضوع الآن: 1 (0 من الأعضاء و 1 زائر)

المواضيع المتشابهه

  1. சோழிய வெள்ளாளர்
    بواسطة الارشيف في المنتدى दक्षिण एशिया मंच
    مشاركات: 0
    آخر مشاركة: 05-09-2017, 12:50 AM
  2. ஆறுநாட்டு வெள்ளாளர்
    بواسطة الارشيف في المنتدى दक्षिण एशिया मंच
    مشاركات: 0
    آخر مشاركة: 05-09-2017, 12:48 AM
  3. வீரகுடி வெள்ளாளர்
    بواسطة الارشيف في المنتدى दक्षिण एशिया मंच
    مشاركات: 0
    آخر مشاركة: 05-09-2017, 12:44 AM
  4. ஆறுநாட்டு வெள்ளாளர்
    بواسطة الارشيف في المنتدى दक्षिण एशिया मंच
    مشاركات: 0
    آخر مشاركة: 05-09-2017, 12:35 AM
  5. சைவ வெள்ளாளர்
    بواسطة الارشيف في المنتدى दक्षिण एशिया मंच
    مشاركات: 0
    آخر مشاركة: 05-09-2017, 12:34 AM

مواقع النشر (المفضلة)

مواقع النشر (المفضلة)

ضوابط المشاركة

  • لا تستطيع إضافة مواضيع جديدة
  • لا تستطيع الرد على المواضيع
  • لا تستطيع إرفاق ملفات
  • لا تستطيع تعديل مشاركاتك
  •  
MidPostAds By Yankee Fashion Forum